31.2 C
Kuala Lumpur
Tuesday, July 21, 2026

Vetri

அஸ்மின் அலி தனது விருப்பமானபிரதமர் வேட்பாளர் அல்ல!

🔥 Views : 24
👁 Reading Now : 38

டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தனது விருப்பமான பிரதமர் வேட்பாளர் அல்ல என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது குறிப்பிட்டார்.
மாறாக, தன்னிடம் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கந்தார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் வேட்பாளர்களாக அஸ்மினையும் அவரது மகன் முக்ரிஸையும் தேர்வு செய்ததாக வெளியான பத்திரிகை செய்திகளைத் தொடர்ந்து மகாதீர் இவ்வாறு கூறினார்.
நான் எந்தப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், சொல்லிதான் ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.
நான் அஸ்மினுடன் நல்ல உறவில் இருப்பதால், அஸ்மின் எனது வேட்பாளர் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்..
ஆனால் அவர் எனது வேட்பாளர் அல்ல. இது மக்கள் கருத்து என்று நான் சொல்கிறேன், அதாவது, பிரதமராக அஸ்மின் தகுதி பெற்றவர் என்று இணையம் வழி செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
பெஜுவாங் கட்சித் தலைவரான அவர் மேலும் கூறுகையில், மூன்று பெயர்களைப் பிரதமர் வேட்பாளர்களாகக் குறிப்பிடுமாறு கேட்டபோது, ஜெர்லுன் எம்.பி.யான முக்ரிஸின் பெயரையும் குறிப்பிட வேண்டி வந்ததாகக் கூறினார்.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெயரை அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles