24.7 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

கோவிட் நோயாளிகள் சடலங்களை வைக்க கிள்ளான் மருத்துவமனைக்கு இரண்டு கொள்கலன்கள்

கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் மேலும் 2 கொள்கலன்களை வழங்கியுள்ளார்.
கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது பொது மருத்துவமனை சவக்கிடங்கில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை சமாளிக்க ஏற்கெனவே ஒரு கொள்கலனை மஇகா வழங்கிய நிலையில் மேலும் இரண்டு கொள்கலன்களை வழங்கியுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்திலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கிள்ளான் வட்டாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் ஒன்றாகும்.
இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இந்த வட்டாரத்தில் இயங்கும் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு இதுவரை மொத்தம் 3 கொள்கலன்கள் மஇகா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles