
நாடாளுமன்றத்தின் முழு கூட்டத் தொடர் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸார் ஹருண் தெரிவித்தார்.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரையில், அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மக்களவையின் சிறப்பு அமர்வு என்று அவர் விளக்கினார்.
மக்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்புக் கூட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அஸார் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2021, ஜனவரி 11 தேதியிட்ட அவசரகாலப் பிரகடனம், இன்னும் நடைமுறையில் இருந்தாலும் கூட்டத்தை நடத்த, மாமன்னர் அனுமதி அளித்திருப்பதாக பிரதமர் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவசரநிலை முடிவடையும்.
14ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டமான முழு மாநாடு, செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று அஸார் தெரிவித்தார்.