
ஜொகூர் கெம்பாஸ்,இம்பியான் இமாஸ் பகுதியில் தமிழ்ப்பள்ளிக்கு அடையாளம் காணப்பட்ட நில விவகாரம் தொடர்பில் ஜொகூர் மாநில மஇகாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான பொறுப்பளரான சு.கண்ணன் சுப்பையாவுடனான சந்திப்பில் நல்லதொரு தொடக்கம் தெரிவதாக,அவரை சந்தித்த பிறகு பத்திரிக்கைக்கு அளித்த அறிக்கையில் ஜொகூர் ஜசெக கிளைத் தலைவர் சந்திர சேகரன் ஆறுமுகம் கூறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஜொகூர் ஜசெகவைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆறுமுகத்திற்கும் கூலாய் மஇகாவைச் சேர்ந்த சுப்பையா சோலைமுத்துவிற்கும் அந்த நிலம் இருக்கிறாத இல்லையா என்ற விவாதம் உச்சக் கட்டத்தை அடைந்தது.
அதனை தொடர்த்து மாநில தமிழ்ப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளரான கண்ணன் அந்த கெம்பாஸ், இம்பியான் இம்மாஸ் தமிழ்பள்ளிக்கு அடையாளம் காணப்பட்ட நில விவகாரம் குறித்து ஒரு சந்திப்பு நடத்தி சந்திர சேகரன்னிடம் விளக்கத்தை கேட்டு அறிந்தார்.
இந்த சந்திப்பில் முன்னாள் நகராண்மை கழக உறுப்பினரும்,கெம்பாஸ் இந்திய நலன்பிரிவு இயக்க தலைவருமான குணசேகரன் நாகப்பன்னும் கலந்துக்கெண்டு அனைத்து ஆவணங்ளையும் காண்பித்து விளக்கம் அளித்தார்.
அந்த நில விவகாரம் குறித்து ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர். நித்யாநன்தனுடன் கலந்து ஆலோசித்து மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்குவதாக ஸ்கந்தர் புத்ரி தொகுதி தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ கண்ணன் சுப்பையா தெரிவித்தார்.
மேலும் டத்தோ கண்ணன் அந்த பள்ளி அங்கு அமைய அனைத்து வேலைகளையும் கண்டு அறிய போவதாக தெரிவித்ததோடு, அனைத்து தரப்பும் ஒன்றாக இணைந்து அந்த வட்டாரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கலாம் என தெரிவித்ததாக சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார்.