
சிலாங்கூர் மாநிலத்திற்கு மேலும் பத்து லட்சம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மத்திய அரசின் தொழில் துறைக்கான பிக்காஸ் திட்டம் மற்றும் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் ஆகியவற்றின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூடுதல் தடுப்பூசி விநியோகிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினை தொடர்பு கொண்ட போது கூடுதலாக பத்து லட்சம் தடுப்பூசிகளை வழங்க அவர் ஒப்புக் கொண்டார்.
இந்த தடுப்பூசிகளைக் கொண்டு ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்று அவர் கூறினார்.