
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து கொள்ளாமலேயே தனியார் மருத்துவமனை அல்லது தனியார் கிளினிக்கில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா அறிவித்தார்.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னமும் தடுப்பூசி பதிந்து கொள்ளாமல் இருந்தால் நேரடியாக தனியார் கிளினிக் அல்லது தனியார் மருத்துவமனையில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது
. அதன் பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார் .



