28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

செப்டம்பர் 3ஆம் தேதியில் நெகிரி சட்டமன்ற கூட்டத்தொடர்

🔥 Views : 19
👁 Reading Now : 22

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெறுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் இன்று அறிவித்தார். நெகிரி மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு மாநில ஆளுநர் துவங்கு முக்ரிஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் செப்டம்பர் 3-ஆம் தேதி நெகிரி மாநில ஆளுநர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்றும் டத்தோஸ்ரீ அமினுடின் தெரிவித்தார்.
தற்போது நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக அருள்குமார் மற்றும் வீரப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாநில துணை சபாநாயகராக டத்தோ எம். ரவி பதவி வகிக்கிறார். பி.குணசேகரன் மற்றும் மேரி ஜோசப்பின் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles