31.4 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

பாடாங் செராய் தொகுதி மக்களின் தேவையே எனது சேவை – எம்பி கருப்பையா நெகிழ்ச்சி

🔥 Views : 20
👁 Reading Now : 67

வேலையும்,வருமானமும் இன்றி சிரமப்படும் குடும்பங்களுக்கு பாடாங் செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி உதவிப்
பொருட்களை வழங்கி ஆதரவளித்தார்.
தமது நாடாளுமன்றத்
தொகுதியிலுள்ள தாமான் சாவி,தாமான் கோபிஸ்,தாமான் லோபாக்,தாமான்
திராம்,தாமான் குச்சாய் தாமான் இமாஸ் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில்
வசிக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அவர் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வழங்கினார்.தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் கோவிட் – 19 தொற்று பிரச்சனை காலமாக
இருந்தாலும்,சாதாரன நாட்களாக இருந்தாலும்,மக்கள் சிரமப்படும் நேரத்தில்
அவர்களுக்கு கை கொடுத்தி உதவுவதே ஒரு மக்கள் பிரதிநிதியின்
கடமையாகும் என அவர் கூறினார்.
அந்த வகையில் இந்த பாடாங் செராய்
நாடாளுமன்றத் தொகுதியில் மலாய்க்காரர்,சீனர்,இந்தியர் என மூன்று
சமூகத்திற்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக எம்பி
கருப்பையா முத்துசாமி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles