31.4 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

இரு முதியவர்களுக்கு சக்கர நாற்காலி! சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உதவினார்

🔥 Views : 19
👁 Reading Now : 57

நடக்க முடியாமல் அவதியுற்று வரும் முதியவர்கள் இருவருக்கு
பினாங்கின் பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ்
முனியாண்டி சக்கர நாற்காலியை வழங்கினார்.
தாமான்
லிம்போங்கான் என்ற இடத்தில் வசித்து வரும் முதியவர் சுமதி மற்றும்
கம்போங் சுங்கை நியோரில் வசிக்கும் சித்தி ரபியா ஆகியோருக்கு இந்த
உதவியை செய்து கொடுத்ததாக அவர் கூறினார்.
உதவிக் கேட்டு வரும் தனது தொகுதி மக்களுக்கு இல்லையென்று சொல்லாமல்,இயன்ற அளவு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தமது கடமை என்றார்.
நேற்று முன்தினம் நேரில் சென்று இந்த உதவியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles