
விஷத்தைக் குடித்து குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற காணொளி ஒன்றை செய்து வெளியிட்ட இந்தியத் தம்பதியரை போலீசார்
கைது செய்துள்ளனர்.
வறுமையின் கொடுமையால் உயிர்வாழ விரும்பவில்லை எனும் தோரணையில்,தனது 9 மாத குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தாமும்,தமது மனைவியும் விஷத்தை குடிப்பது போன்ற
ஒரு நடிப்பை காணொளியில் செய்து காட்டி,பொது மக்களின் பார்வையில்
அச்சத்தை ஏற்படுத்துவதுப் போன்ற தேவையற்ற செயலை அவர்கள்
புரிந்திருப்பதாக சிரம்பான் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சைட்
இப்ராஹிம் கூறினார்.29 வயதான கணவர் நேற்றிரவு 10 .20
மணிக்கும்,மனைவி இன்று அதிகாலை 3 .15 மணிக்கும் கைது
செய்யப்பட்டனர். கோவிட் -19 தொற்றை துடைத்தொழிப்பதில்
அரசாங்கத் தலைவர்கள் தவறி விட்டதால்,அதிருப்தியை வெளிப்படுத்தும் ஆடவரின் 16 நிமிடம் 03 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.



