
1எம்டிபிக்கு சொந்தமான 220 கோடி வெள்ளி ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் அடாமுக்கு இன்று ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவருக்கு விதிக்கப்பட்ட ஒருமாதச் சிறைத்தண்டனை உடனடியாக அமுலுக்கு வருவதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரை மிரட்டியதோடு நீதிமன்றத்தை அவமதித்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



