
வரும் சனிக்கிழமை முதல் சிலாங்கூர் மாநிலத்தில் ரமலான் சந்தைக்கு அனுமதி இல்லை. இந்த ரமலான் சந்தை யால் பாதிக்கப்படும் 11,000 வியாபாரிகளுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தலா 500 வெள்ளி வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தெரிவித்தார். இரவு சந்தை மற்றும் பசார் ராயா செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் 6 மாவட்டத்தில் நடமாட உத்தரவு காலத்தில் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றார் அவர். பெட்ரோல் எண்ணெய் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதி உண்டு.



