34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

கோவிட் நோயாளிகள் சடலங்கள் அடக்கம் செய்வது தொடர்பில் விவாதிக்கப்பட்டது

🔥 Views : 9
👁 Reading Now : 54

நோய்த்தொற்றால் மரணமடையும் நோயாளிகளின் சடலங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் நோய் தொற்றால் மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, சுங்கை பூலோ பெரிய மருத்துவமனை மற்றும் ஷா ஆலம் மருத்துவமனையில் மரணமடையும் நோயாளியின் சடலம் விரைந்து அடக்கம் செய்வது தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முஸ்லிம் நோயாளிகளின் சடலங்களை அடக்கம் செய்யும் பொறுப்புகளை இஸ்லாமிய சமய மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்களின் சடலங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்யும் பொறுப்புகளை நகராண்மைக் கழகங்கள் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles