34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

ஒப்பந்த மருத்துவர் சிக்கலை சுமூகமாக தீர்க்க வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 47

ஒப்பந்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட சிக்கலை அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி இளைஞர் பிரிவு சார்பில் அத்ன தலைவர் டாக்டர் தமிழ்மாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
துடிப்புமிக்க இளம் மருத்துவர்களை முடக்கி வைப்பதற்கும் அவர்களை நிச்சயமற்ற நிலையில் தள்ளுவதற்கும் மாறாக, அவர்கள் எதிர்நோக்கும் அவலத்தை அரசு செவிமடுக்க முன்வர வேண்டும்.
உட்புறப் பகுதிகள் மற்றும் தோட்டப்புறங்களில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒப்பந்த மருத்துவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்கள் பெற்ற மருத்துவ கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் தங்களின் ‘ஹௌஸ்மென்ஷிப்’ பயிற்சியை சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் பெறுவதற்காக அரசாங்க, தனியார் மருத்துவமனகள் அடங்கிய பெருந்திட்டத்தை வகுக்க வேண்டும்.
மருத்துவப் பயிற்சி அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கி அவர்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.
. நாட்டில் 154 அரச மருத்துவமனைகள் இருக்கும் அதேவேளை 250 தனியார் மருத்துவமனைகள் உள்ளன; அதேவேளை, அரசாங்கத்தின் சார்பில் 5 மருத்துவப் பயிற்சி மனைகளும் ஒரேயொரு தனியார் மருத்துவப் பயிற்சி மனையும் உள்ளன. மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் அரசாங்கத்துடன் தனியார் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றும் அதேவேளை, சிறப்பு மருத்துவர்களை உருவாக்குவதிலும் தனிகவனம் செலுத்தினால், அது மருத்துவத் துறையின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் தமிழ்மாறன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles