27.4 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

பண்டர் புக்கிட் திங்கி மக்கள் கோவிட் பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்! டாக்டர் குணராஜ் வேண்டுகோள்

🔥 Views : 55
👁 Reading Now : 32

பங்சாபூரி பண்டார் புக்கிட் திங்கி (1) கிள்ளான் பகுதியில் Emco எனப்படும் கடுமையான மக்கள் நடமாட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தேசிய பாதுகாப்பு மன்றம் இங்கு Emco உத்தரவை பிறப்பித்துள்ளது. நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இங்குள்ள மக்களிடம் கோவிட் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வரவேற்கக் கூடியது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். இங்குள்ள மக்கள் பொறுமை காத்து போலீஸ் வழங்கும் அறிவுரைகளைக் கேட்டு எஸ்ஓபி விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவப் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசிகள் போடப்படும்.
அதேசமயம் இங்குள்ள மக்களிடையே நோய்த்தொற்றை கட்டுபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வரவேற்கக்கூடியது என்று தெரிவித்த அவர் இங்குள்ள மக்கள் ஒன்றுகூடி நோய்த் தொற்றை எதிர்த்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
14 நாட்கள் வீட்டிலேயே இருக்கும் இங்குள்ள மக்கள் பொறுமை காத்து மருத்துவப் பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles