31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

நோய்த்தொற்றை விரைந்து கட்டுப்படுத்துங்கள்!இல்லையேல் மரணங்கள் அதிகரிக்கும்!

🔥 Views : 50
👁 Reading Now : 20

நோய்த்தொற்றை விரைந்து கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் மரணங்கள் அதிகரிக்கும்!

நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய்த்தொற்று சம்பவங்கள் மலேசியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஏற்கெனவே Emco மற்றும் cmco போன்ற உத்தரவுகளை பலமுறை பிறப்பித்துள்ளது. ஆனால் நாட்டில் நோய்த் தொற்று குறைந்தபாடில்லை. தொழிற்சாலை பகுதிகளில் நோய்த் தொற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் குறிப்பிட்ட காலம் வரை மூடி அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். மேலும் மின்னல் வேகத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜசெக கிளை தலைவர் சுரேந்திரன் பலராமன் தெரிவித்தார்.
அரசாங்கம் தீவிரமான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் நோய்த் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles