26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் முதியோர்கள் எண்ணிக்கை குறைகிறது

🔥 Views : 8
👁 Reading Now : 46

தடுப்பூசிகள் போடும் பணி விரைவுபடுத்தியதால் கோவிட் நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை முன்பை விட 40 விழுக்காடு குறைந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று வரை 90 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்படும் முதியோர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் சொன்னார்.
ஒரு சிலருக்கு நோய்த் தொற்று கண்டாலும் தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பு காரணமாக நோய்த் தாக்கம் குறைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட அதிகமான மரணச் சம்பவங்கள் தடுப்பூசி பெறாத முதியோர் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இதன் அடிப்படையில் பொதுமக்களின் உயிரைக் காப்பதற்கு அதிக அளவில் தடுப்புசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles