32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட சிலாங்கூர் அரசு இலக்கு!

🔥 Views : 10
👁 Reading Now : 30

சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தினசரி மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை மாநில அரசாங்கம் கொண்டிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தில் விநியோகிக்கப்படும் தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை சிலாங்கூர் அரசு அதிகரிக்கும்.
மாநில மக்களிடையே கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேசிய மீட்புத் திட்டத்தில் இரண்டாம் கட்டத்திற்குச் செல்வதற்கும் மாநில அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்பு திட்டம் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் நடந்த சந்திப்பில் சிலாங்கூரில் தினசரி 272,000 தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டதாக அமிருடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles