32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

அகதிகள், சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பூசி – சிலாங்கூர் அரசு தீவிரம்!

🔥 Views : 9
👁 Reading Now : 53

அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேறியவர்களுக்கும் தடுப்பூசி போடப் படுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் நிர்வாகத்துடன் தொடர்ந்து செயல்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இவர்கள் நோய்த்தொற்றுகளை பரப்புவதை தடுப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கும் தடுப்பூசி போடப்படுவது அவசியம்.
500,000 ரோஹிங்கியா அகதிகள் மாநிலத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles