28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ஒன்றுபட்டு நிற்போம்; நம்மை நாமே காப்போம்!

🔥 Views : 8
👁 Reading Now : 62
கடந்த ஆண்டு முதல்கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே புக்கிட் ரோத்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்கின்ற நலிந்த மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருள் வழங்கும் உதவியை ஆலயத்தின் சார்பிலும் சக்தி அறவாரிய அறங்காவலர்களின் ஒத்துழைப்பிலும் வழங்கி வருகிறோம். தற்பொழுது ஐந்தாவது கட்டமாக உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம் என்று ஆலயம் மற்றும் அறவாரியத் தலைவர் சிவஸ்ரீ முத்துக்குமார சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக 100 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான அடிப்படை உணவுப் பொருட்களை வழங்கிவரும் வேளையில் மேலும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு ஒரு வாரத்தில் உணவுப் பொருளை வழங்கி உதவ இருக்கிறோம். இதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்.
அதேசமயம், இந்த உதவி யாவும் பொருத்தமான குடும்பங்களை சென்றடைகிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. காரணம், சக்தி அறிவாரியத்தின் சார்பில் இவ்வாறு உதவிப் பொருள் வழங்கும்போது நல்ல நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் பொருட்களை வாங்கிச் செல்வதை காண முடிகிறது.
அதனால், நலிந்த குடும்பங்களுக்கு மட்டும் இந்த உணவுப் பொருள் சேர்வதை உறுதிப்படுத்தவும் அதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் வேண்டி இருக்கிறது. தற்போது, நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலம் என்பதால், எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஏழையருக்கு செய்யும் உதவி இறைவனுக்கு ஆற்றும் தொண்டு என்னும் அடிப்படையில் கொடைமனமும் தயாள சிந்தனையும் கொண்டு நன்கொடை அளிப்பவர்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும்படி கேட்டுக் கொள்ளும் அதேவேளை, நாமெல்லாம் சேர்ந்து முன்னெடுக்கும் இந்த சேவைக்கு அருள்மிகு இலெட்சுமி கணபதியும் அருள்மிகு அன்னை சக்தி மாரியம்மனும் துணை இருப்பார்கள் என்று முத்துக்குமார சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles