34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் காப்பாரில் புதிய மின் சுடலை கட்டப்பட வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 61

இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் காப்பார் நகரில் புதிய மின் சுடலை கட்டப்பட வேண்டும் என்று
மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவை தலைவர் அருள்நேசன் ஜெயபாலன், அதன் ஆலோசகர் நாதன் ஜி. கணேஸ்வரம் மற்றும் செயலாளர் சீமான் பெருமாள் ஆகியோர் மேரு சட்ட மன்ற உறுப்பினர் துவான் உஸ்தாட் ஃபாக்ஹருள்ராசி பின் மொக்தரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ‌காப்பார் நகரில் நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வரும் இந்து மின்சுடலை உடனடியாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமும் மலேசிய இந்து சங்கத்தின் காப்பார் வட்டார பேரவை முன் வைத்துள்ளது.
தற்போதைய காப்பார் வட்டாரத்திலுள்ள இந்து மயானம் பழைய பாணியிலுள்ள மரக்கட்டைகளைக் கொண்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது.
கோவிட் – 19 தொற்றால் மரணமடைந்த ஒருவரை இதுபோன்ற திறந்தவெளி தகனம் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மலேசிய சுகாதர அமைச்சு விதித்திருப்பதால் காப்பார் வட்டார மக்களின் அவசியத்தைப் புரிந்து மின்சுடலை ஒன்றை கட்டுவதற்கு மாநில அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles