29 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

நோய்த்தொற்றை தொற்றைக் கையாள்வதில் அமைச்சர் அலட்சியம்

🔥 Views : 10
👁 Reading Now : 28

மலேசியாவில் மோசமடைந்து வரும் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவும் தொடர்புடைய அமைச்சர்களும் “அலட்சியம்” காட்டுகின்றனர் என்று கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று போலிஸ் புகார் பதிவு செய்தது..
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதிலும், அதிகமான மக்கள் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதிலும் அரசாங்கம் தனது கடமைகளையும் நடவடிக்கைகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் கடமைகளை நிறைவேற்றுவதில் குற்றவியல் அலட்சியம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் விளைவாக சமூகத்தில் கோவிட் -19 பரவியது, இது உயிருக்கு ஆபத்தையும் மரணத்தையும் விளைவித்தது என்று கோலாலம்பூர், பந்தாய் காவல் நிலையத்தில் செய்த போலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த போலீஸ் புகாரை செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles