
தற்போதைய சிக்கலான இந்த கோவிட் காலக்கட்டத்தில், மக்கள் பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
நாள்தோறும் இறப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. வாழ்வின் ஜீவாதாரமே இழந்துவிட்ட நிலையில், ஒரு குடும்பத்தின் உயிர் இழப்பு என்பது கொடுமையிலும் கொடுமை.
அதிலும் தன் அன்புக்குரியவருக்கு இறுதிச் சடங்கை கூட நிறைவேற்ற முடியாத சக்தியற்ற நிலை என்பது வலியான சோகம்.
இத்தகைய நிலை எவருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில், இறுதிச் சடங்கு செய்ய வசதி இல்லாதவர்களுக்காக உதவ முன்வந்துள்ளார், தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன்.
இறுதிச் சடங்கினை முறையாகச் செய்து தருவதற்கு தங்களிடம் குழு உள்ளது என்று கூறும் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன், தயங்காமல் தங்களை அழைக்கலாம், நாங்கள் உதவுகிறோம் என்கிறார்.
இதனிடையே, இன்று, ஷா ஆலாம் அரசு மருத்துவமனைக்கு 45 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான கொள்கலனை டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன் இலவசமாக வழங்கியதோடு,
தற்போதுள்ள காலக்கட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கும், அரசுக்கும் நாம் கைகொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்!



