
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிங் பெறும் கோவிட் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை, கிளினிக் மற்றும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்கு ஏதுவாக கூடுதல் வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி கூறினார்.
தற்காலிக வார்டுகளாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட தற்காலிக கூடாரங்களும் அனைத்து மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் 81 படுக்கைகள் கொண்ட அந்த தற்காலிக கூடாரங்களில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக மின் விசிறி, சுத்தமான குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.



