
MCO எனப்படும் மக்கள் நடமாட்டம் உத்தரவு போடப் பட்டிருக்கும் மாவட்டங்களில் உணவங்களில் ஒரு மேஜையில் இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்க வேண்டும் என்று உணவக உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் பல இடங்களில் இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே 2 முறை அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டம் உத்தரவால் உணவக உரிமையாளர் கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர. மூன்றாவது முறையாக போடப் பட்டிருக்கும் மக்கள் நடமாட கட்டுப்பாட்டு உத்தரவா ல் உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று கண்ணா கறி ஹவுஸ் உரிமையாளர் கண் ணா தெரிவித்தார்.

உணவகங்களில் ஒரு மேஜையில் இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கும்படி அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே இந்த மக்கள் நடமாட்டம் உத்தரவால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். இப்போது மூன்றாவது முறையாக அமுல்படுத்தப்படும் இந்த உத்தரவால் பெரும் இழப்பை எதிர் நோக்குவோம் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
