29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

உலக டைவிங் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற
பெண்டேலாவுக்கு மாமன்னர் வாழ்த்து

🔥 Views : 8
👁 Reading Now : 63

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக டைவிங் நீச்சல் போட்டியில் மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
நீச்சல் வீராங்கனை பெண்டேலா ரினோங் 10 மீட்டர் டைவிங் நீச்சல் பிரிவில் மலேசியாவுக்கு தங்க பதக்கம் பெற்றுத் தந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனை மாஸ்தாரி என்பவருக்கு வெள்ளிப் பதக்கமும் கனடா வீராங்கனை மிக்கி என்பவருக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.
இந்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை பெண்டேலா ஜூலை மாதம் நடைபெறும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் போட்டியில் மலேசியாவுக்கு தங்கம் பெற்று தந்து சாதனை படைத்திருக்கும் பெண்டேலாவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உலக அரங்கில் மலேசியாவின் புகழை நிலைநாட்டிய இவருக்கு வாழ்த்துகள் என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
இதனிடையே நூறு ஆண்டுகால வரலாறு கொண்ட ஒலிம்பிக் போட்டியில் இதுவரை மலேசியா தங்கப்பதக்கம் வென்றது இல்லை.
ஜப்பான் தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் மலேசிய இருக்கிறது.
2016 பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கு நான்கு வெள்ளி பதக்கம் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்தன.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இலக்கில் விளையாட்டு வீரர்கள் he மற்றும் வீராங்கனைகள் உற்சாகத்துடன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles