
இன்னமும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத நாடாளுமன்ற
உறுப்பினர்களின் பெயர்களை அம்பலப்படுத்துங்கள் என்று ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நாசிர் வலியுறுத்தினார்.
சமய அடிப்படையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியானால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை அம்பலப்படுத்தும்படி துணை சபாநாயகர் ரஸிட் ஹருணை அவர் கேட்டுக்கொண்டார்.



