
வரும் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தேசிய தடுப்பூசி திட்ட குழு தலைவர் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
நேற்றுவரை 3 லட்சத்து 3,682 ஆசிரியர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது..
இதில் படிவம் 5 படிவம் 6 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் 80 ஆயிரத்து 717 ஆசியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12,894 ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்து ஆசிரியர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்படும் என்று அவர் சொன்னார்.



