33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது எந்தவொரு அம்னோ எம்பிக்கும் தெரியாது

🔥 Views : 10
👁 Reading Now : 46

ஜூலை 21ம் தேதியோடு நாட்டின் அவசரகால உத்தரவு ரத்து செய்யபட்டதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அவசரகால உத்தரவு சுயேட்சை நடவடிக்கை குழுவில் அம்னோ சார்பில் டத்தோ நோ ஓமார் இடம் பெற்றிருக்கிறார்.
இந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டது கூட அவருக்கு தெரியாது.
மேலும் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த தொலைக்காட்சியிலும் எந்த ஒரு அறிவிப்பும் செய்யப்படவில்லை.
சட்டத்தின் அடிப்படையில் இந்த அவசர உத்தரவு ரத்து செய்யப்படவில்லை. அமைதியான முறையில் இதை ரத்து செய்திருப்பதாக அரசாங்கம் கூறுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்னரின் அங்கீகாரம் இல்லாமல் இந்த அவசரகால உத்தரவை அரசாங்கம் ரத்து செய்ய முடியாது என்று அவர் சொன்னார்.
அம்னோ எம்பிக்கள் உட்பட ஏராளமான எம்பிக்கள் இது தொடர்பில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த உத்தரவு முடிவுக்கு வருவதால் அது விவாதிக்கப்பட வேண்டும் என்று நோர் ஓமார் வலியுறுத்தியதை சபாநாயகர் டத்தோ அஸாஹர் கண்டுகொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles