
ஜோர்ஜ்டவுனில் சில பகுதிகளில் திடீரென கோவிட் -19 நோய் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதால்,பொதுமக்களும் sop விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்டீப் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் மேற்கொண்டு வரும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மதித்து, எம்சிஓ நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென,நேற்று இங்குள்ள செளரஸ்தா சந்தைக்கு வருகைப் புரிந்தபோது அவர் தெரிவித்தார்.
மேலும் அவரின் இந்த வருகையின் போது பொதுமக்களுக்கு முகக் கவசங்களும்,உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டதாக இச்சந்தையின் வணிகர்கள் சங்கத் தலைவர் தலைவர் முகமட் நசீர் முஹிதீன் தெரிவித்தார்
இந்நிகழ்வுக்கு பேராதரவு வழங்கிய தனியார் நிறுவனங்கள்,எல்லா வகையிலும் ஒத்துழைத்த அனைவருக்கும், செளரஸ்தா சந்தை வணிகர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத்தின் தலைவருமான அவர் கூறினார்.



