
பாராங் கத்தி ஏந்திய அடையாளம் தெரியாத கும்பலால் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமை இயக்குனர் டத்தோ எம்.ராமச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுகைய்லி தெரிவித்தார்.
45 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இந்த மூவரும் பிறை மற்றும் பட்டர்வொர்த்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் குண்டர் கும்பலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும் வேலையில் உண்மையான காரணத்தை போலீசார் புலன் விசாரணை செய்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.



