
மலேசிய மருத்துவச் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு தலைமையிலான சிறப்பு பணிக்குழு ஓய்வூதியச் சட்டத் திருத்தங்களை ஆய்வு செய்து, 23,000 மருத்துவர்களுக்கு இரண்டு ஆண்டு கால ஒப்பந்த நீட்டிப்பு, ஈபிஎஃப் பங்களிப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு முழு மனதுடன் ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். திருத்தத்திற்காகக் காத்திருக்கும்போது, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் முதுநிலை மட்டத்தில் தங்கள் படிப்பைத் தொடரலாம்.
இரண்டு ஆண்டுகளில் அல்லது அதற்கும் குறைவாக, அவர்கள் ஈபிஎஃப் திட்டத்தின் கீழ் நிரந்தரப் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள்.
இந்தக் கடினமானக் காலங்களில், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை விட, பல்வேறு தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு நல்ல தீர்வை எட்ட நான் பாடுபடுவேன் என்று அவர் சொன்னார்.



