29.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

வசதி குறைந்தவர்களை நாடிச் சென்று உதவி கரம் நீட்டுகிறது சீரடி சாய்பாபா அறவாரியம்

🔥 Views : 8
👁 Reading Now : 61

மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி கொண்டிருக்கும் மலேசிய ஸ்ரீ சீரடி சாய்பாபா அறவாரியம் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறது.
மலேசிய ஸ்ரீ சீரடி சாய்பாபா அறவாரியம் தொடங்கப்பட்டு இந்த எட்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கஷ்டப்படும் மக்களை நாடிச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உதவி வருகிறோம் என்று மலேசிய ஸ்ரீ சீரடி சாய்பாபா வாரியத்தின் தலைவர் சாய் ஜோன் ஜி மற்றும் துணைத் தலைவர் சத்தியா ஜி தெரிவித்தனர்.
நோய்த்தொற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கிள்ளான் புக்கிட் செந்தோசா, ரவாங் புக்கிட் புருந்தோங், சுங்கைவே, கெப்போங் மற்றும் உலுயாம் பாரு ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்துள்ளோம்.
இன்னமும் பலர் தங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இனி வரும் வாரங்களில் அவர்களுக்கும் உணவு கூடைகள் வழங்கப்படும் என்று அவர்கள் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles