29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

இருண்ட எதிர்காலத்தில் 23,000 ஒப்பந்த மருத்துவர்கள்!

🔥 Views : 6
👁 Reading Now : 67

நாட்டில் பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் 23 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்களின் எதிர்காலம் இருண்டகாலமாக இருக்கிறது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ சிவகுமார் வேதனையுடன் தெரிவித்தார்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒப்பந்த மருத்துவர்கள் இப்போது துணிச்சலாக மறியலில் இறங்கியுள்ளனர்.
இன்னும் இரண்டு ஆண்டுக்குள் ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்தாலும் அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒப்பந்த மருத்துவர்கள் என்பதால் இவர்கள் மேற்கல்வி தொடர முடியவில்லை வங்கியில் கடன் பெற்று செந்துறை வாங்கவும் தகுதி இல்லை.
இவர்களுக்கு ஊழியர் சேமநிதியையும்
இல்லை.
இப்படிப்பட்ட ஒரு வேதனை வாழ்க்கையில் ஒப்பந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்.


பல லட்சம் வெள்ளியை செலவு செய்து இன்று மருத்துவர்களாக இருக்கும் இவர்கள் ஒப்பந்த மருத்துவர்கள் என்பதால் அனைத்து சலுகைகளையும் இழந்த இருக்கிறார்கள் இனி வரும் காலங்களில் நமது மாணவர்கள் மருத்துவத் துறையை தேர்வு செய்வார்களா என்பதும் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. மருத்துவர்களுக்கு இக் நிலை என்றால் இனி இந்தத் துறையில் படித்தால் நிரந்திர வேலை கிடைக்குமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுகிறது.
ஆகவே இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles