29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பாயான் பாரு தொகுதியில் 40 இளைஞர்கள் கெஅடிலானில் இணைந்தனர்

🔥 Views : 13
👁 Reading Now : 24

பினாங்கின் பாயான் பாரு நாடாளுமன்றத்தில் உள்ளடக்கிய கம்போங் பத்து உபான் பகுதியைச் சேர்ந்த 40 இளைஞர்கள் கெஅடிலான் கட்சியில் இணைந்தனர்.
பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாயான் பாரு
கெஅடிலான் தொகுதி இளைஞர் பகுதி தலைவருமான குமரேசன் ஆறுமுகம் அதற்கான மனுபாரங்களை புதிய உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இளைஞர்கள் கெஅடிலான் கட்சியில் வந்து இணைவதை தாம் மனமுவந்து வரவேற்பதாக கூறிய அவர், இதன் மூலம் பினாங்கு மாநில கட்சியில் இளைஞர்களின் பலம் அதிகரிக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles