29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சுங்கை பாக்காப்பில் ஊரடங்கா ? பொய் தகவலை பரப்பிய பெண் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 57

கோவிட் -19 தொற்று சம்பவத்தால் சுங்கை பாக்காப் பகுதியில் ஊரடங்கு விதிக்கப்படுவதாக குரல் பதிவின் மூலம் பொய் தகவலைத் வெளியிட்ட 47 வயதுப் பெண்ணை தென் செபராங் பிறை மாவட்டப் போலீசார் கைது செய்துள்ளனர்.நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பரவத் தொடங்கிய அந்த தகவலில்,சுங்கை பாக்காப் சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள சில கடைகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால்,சுங்கை பாக்காப் பகுதியில் ஊரடங்கு விதிக்கப்படுவதாக,அப்பெண் தமது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்ததோடு ,புலனத்திலும் அந்த தகவல் அனுப்பப்பட்டு பொதுவில் பரவத் தொடங்கியது.
இதனால் சுற்று வட்டார மக்கள் பெரும் அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தியதாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன் தெரிவித்தார்.அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் அதிகமாக சென்று வந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த தகவலை வெளியிட்டதாக,போலீஸ் விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்த பொய்யான தகவலால் இன்றுக் காலை சுங்கை பாக்காப் சந்தை வெறிச்சோடு காணப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles