29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மரியாதையாக பிரதமர் பதவி விலகவேண்டும் டத்தோஸ்ரீ நஜிப் வலியுறுத்து!

🔥 Views : 6
👁 Reading Now : 69

அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாமன்னரின் அனுமதியை பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மரியாதையாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜூலை 21ம் தேதியோடு அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஆனால் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாமன்னரின் அனுமதியை பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தையும் குழப்பி, அரண்மனையையும் குழப்பி, அவசரகால சட்டம் ரத்து தொடர்பான முடிவுகள் மாமன்னரை வருத்தமடையச் செய்துள்ளது.
நம் நாட்டின் கோட்பாடு அரச சபையை மதித்து நடத்தல் என்பதாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமானம் எடுத்துள்ள நிலையில், தற்போது இதை மீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முழு பொறுப்பு ஏற்றுப் பதவி விலக வேண்டும் என டத்தோ ஸ்ரீ நஜீப் கேட்டுக் கொண்டார்.
மாமன்னர் தற்காலிகப் பிரதமரை பரிந்துரை செய்ய வேண்டும். அவர்கள் நாடாளுமன்ற வாக்கெடுப்பு வாயிலாக பதவி வகிப்பர் என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்.
அம்னோவின் நிலைப்பாடு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிப்பதுதானே தவிர, பிரதமரை அல்ல.ஆகவே பிரதமர் கௌரவமாக பதவி விலக வேண்டும் என டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles