29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சுற்றுலாத்துறை பாதிப்பால் வருமானமின்றி பரிதவிக்கும் பேச்சா சைக்கிள் ஓட்டிகளுக்கு புளு பிரதர்ஸ் உதவி

🔥 Views : 7
👁 Reading Now : 27

நாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்று தாக்கத்தினால் மலாக்காவில் உள்ள பேச்சா சைக்கிள் ஓட்டிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சுற்றுலாத்துறை முடக்கம் கண்டிருப்பதால் சுற்றுப் பயணிகள் யாரும் மலாக்கா வருவதில்லை.
இதனால் பேச்சா சைக்கிள் ஓட்டிகள் வருமானம் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.
மலேசியா புளு பிரதர்ஸ் இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரன் கிருஷ்ண, ஆலோசகர் டத்தோ மைக்கல், இயக்கத்தின் உச்ச மன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ நாகேஸ்வரன் ரவி, டாக்டர் சுமன், கணேசன் அன்பழகன் மற்றும் மலாக்கா ஹாங் துவா கவுன்சிலர் அன்பழகன் பெருமாள் ஆகியோர் ஏற்பாட்டில் பேச்சா சைக்கிள் ஓட்டிகளுக்கு போதுமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலாக்காவில் உள்ள பேச்சா சைக்கிள் ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் இன்னல்களை கேட்டறிந்து அவர்களுக்கு போதுமான உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக டாக்டர் ராஜேஸ்வரன் கிருஷ்ணா தெரிவித்தார்.
கஷ்டப்படும் இவர்களுக்கு அரசாங்கம் உதவி புரிய வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles