32.9 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வாருடன் சந்திப்பா? இஸ்தானா நெகாரா மறுப்பு

🔥 Views : 24
👁 Reading Now : 67
நாட்டில் அரசியல் நெருக்கடி பெரும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அரண்மனைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கடுமையான நெருக்கடியும் மோதலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 2.30 மணிக்கு மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்கிறார் என்று கெஅடிலான் வட்டாரம் மேற்கோள் காட்டியுள்ளது.
பகாங் மாநிலத்தில் உள்ள இண்ட்ரா மகோத்தா அரண்மனையில் மாட்சிமை தங்கிய மாமன்னரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திக்கிறார் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதை இஸ்தானா நெகாரா மறுத்துள்ளது.
அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் தற்போது அரசியல் நெருக்கடி பரபரப்பை எட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles