33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மக்களைக் காக்க அரசாங்கம் தவறிவிட்டது! கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் முழக்கம்

🔥 Views : 6
👁 Reading Now : 70
தற்போதைய தேசியக் கூட்டணி அரசாங்கம் நாட்டு மக்களைக் காப்பதில் பல வகையாலும் தோல்வி அடைந்து விட்டதை ஆட்சேபிக்கும் வகையில் ‘கெராக்’ என்னும் மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி அமைதி மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் முழக்கமிட்டனர்
கல்வியாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், உயர்க்கல்வி மாணவர்களின் பெற்றோர் என பலதரப்பினரும் இதில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள், நாட்டுப் பற்றுமிக்க இளைஞர்கள் அதிகமாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு தேவை என்று கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
மாணவ சமுதாயத்தினர் எதற்கும் கேள்வி கேட்கும் தன்மையையும் விமர்சனப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டும். இளையோரிடையே சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது கெராக் அமைப்பின் முக்கிய இலக்காகும். நாட்டு அரசியலில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்களை கூர்ந்து அவதானித்த இந்த அமைப்பினர் இது குறித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles