32.4 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

பசியோடு இருக்க வேண்டாம் கிரியான் ரோட்டரி கிளப்பின் உதவிக்கரம்

🔥 Views : 20
👁 Reading Now : 52

துன்பப்படும் நேரத்தில் கூட யாரும் உண்ண உணவின்றி தவிக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு பேரா கிரியான் ரோட்டரி கிளப் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிக்கரம் நீட்டியது.தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள நிபோங் திபால்,ஜாவி கிரியான் மாவட்டத்தின் பாகான் செராய் மற்றும் பாரிட் புந்தார் ஆகிய இடங்களில் வசிக்கும் வசதிக் குறைந்த 220 குடும்பங்களுக்கு தலா 100 வெள்ளிக்கான பற்றுசீட்டு வழங்கப்பட்டது.
இந்த பற்றுசீட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை கடையில் வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது மக்கள் எதிர்நோக்கி வரும் கோவிட் -19 தொற்றுக் காலத்தில் சிரமப்படும் குடும்பங்களுக்கு கிரியான் ரோட்டரி கிளப்பின் உதவி உதவி இதுவென அதன் தலைவர் தியாகு கோவிந்தசாமி கூறினார்.
இந்த திட்டத்திற்கு அனைத்து நிலைகளிலும் உதவியும்,ஆதரவையும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,கிரியான் மாவட்ட ரோட்டரி கிளப் நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles