33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து!

🔥 Views : 7
👁 Reading Now : 65

ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.
நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-13 என புள்ளிக்கணக்கில் வென்றார்.
அடுத்த செட்டில் சீன வீராங்கனை நெருக்கடி கொடுத்தாலும் சிந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து இம்முறை வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles