
நேற்று வரை நாட்டில் 2 கோடியே 5 லட்சத்து 33 ஆயிரத்து 660 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவர்களில் 1 கோடியே 38 லட்சம் பேர் முதலாவது தடுப்பூசியையும் 67 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெறும் நடைமுறை மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
