31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை FRU போலீசார் தடுத்து நிறுத்தினர்

🔥 Views : 8
👁 Reading Now : 45

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு செல்ல FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங்,வாரிசான் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் ஆகியோர் தலைமையில் எம்பிக்கள் ஒன்று திரண்டனர்.
மேலும் பெர்ஜுவாங், மூடா, சரவா உப்கோ கட்சிகளை சேர்ந்த எம்பிக்களும் இதில் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலையில் டத்தாரான் மெர்டேக்கா திடலில் கூடினர்.
பின்னர் அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட்டனர்.
ஆனால் பிரதான சாலையில் பணியில் அமர்த்தப்பட்ட கலகத் தடுப்பு போலீசார் இவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிக்கையாளர்களும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles