27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

107 எம்பிக்கள் இங்கு கூடியுள்ளனர்! பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது!

நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் 107 எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதன்வழி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்து விட்டதாக அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தை நோக்கி அனைத்து எதிர்க்கட்சிகளும் எம்பிக்கள் சென்றபோது கலகத் தடுப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றினார்.
இங்கு 107 எம்பிக்கள் இருக்கின்றார்கள். டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவர்ந்து விட்டது என்று அவர் முழங்கினர்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரைக்குப் பின்னர் துன் டாக்டர் மகாதீர் உரையாற்றினார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அன்வாரும் மகாதீரும் ஒன்றாக பொதுவெளியில் உரையாற்றியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles