28.5 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

சாலை குழி பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படுமா

🔥 Views : 31
👁 Reading Now : 69

நிபோங் திபால் ஊய் கார் செங் சாலை சந்திப்பில் ஏற்பட்டுள்ள ஆபத்தான குழியை இன்னும் சீர்படுத்தாமல் இருப்பது சாலையை பயன்படுத்துவோருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சாலைக் குழியில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு மூடி காணாமல் போய் விட்டது.இதனை சீர்படுத்துவதற்கு தென் செபெராங் பிறை மாவட்ட பொதுப்பணி இலாகா நடவடிக்கையில் இறங்கி சுமார் ஒரு மாத காலம் நெருங்கும் வேளையில் அப்பிரச்சனைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.
இரும்பு மூடியை இன்னும் பொருட்டப்படாத நிலையில் குழியை சுற்றி பாதுகாப்பு அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தும் பல்வேறு நிலைகளில் வாகனங்கள்,மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றிற்கு பெரும் சங்கடத்தையும்,அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,நகரின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு மாவட்ட பொதுப்பணி இலாகா மற்றும் தொகுதி மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles