29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்; பாதுகாப்புத் தரம் அதிகரிக்க வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 27

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால், எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்த
வேண்டும்.
நாட்டில் தற்போது எரிவாயு கசிவுகளால் பல வெடிப்பு சம்பவங்கள்
ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது என பினாங்கு
பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
பல ஆண்டுகளாக தீச்சம்பவங்கள் இறப்புகள்,காயங்கள்
ஏற்பட்டுள்ளன.
ஆகக்கடைசியாக மருத்துவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்
வெடித்து 95 விழுக்காடு தீப்புண் காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
ஒரு மருத்துவரின் விவரப்படி எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தற்போது
நாட்டின் தீக்காயப் பிரிவுகளில் சேர்க்கப்படுவதற்க்கான பொது காரணங்கள்
இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுபோன்ற சிக்கலான மற்றும்
தீவிரதத்தனமான சம்பவங்களை அரசாங்க மருத்துவமனைகளில் நிர்வகிப்பது
பாதுகாப்பானது என என்.வி.சுப்பாராவ் விவரித்தார்.
மேலும் சிலிண்டர்களை
பயன்படுத்துவோர் அதன் பாதுகாப்பு நடவடிக்கைளை அடிக்கடி உறுதி
செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles