29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

பத்து உபான் தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உதவி

தேவைப்படுவோருக்கு இல்லையென்று சொல்லாமல் தம்மால் இயன்ற உதவிகளை செய்து வரும் பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
குமரேசன் ஆறுமுகம் தமது தொகுதியில் சிரமப்படும் பி40 குடும்பங்களுக்கு
உணவுக் கூடைகளை வழங்கினார்.
கோவிட் – 19 தொற்று காலத்தில்,வேலைகைளையும் வருமானத்தையும் இழந்து தவிக்கும்
குடும்பங்களின் நிலையை அறிந்து,இங்கு லோரோங் சுங்கை டுவா மற்றும்
லிப் சின் பகுதி மக்களை நேரில் சந்தித்து இந்த உதவிப் பொருட்களை
தமது எம்பிகேகே பொறுப்பாளர்களுடன் சென்று வழங்கினார்.
பாயான் பாரு நாடாளுமன்ற சேவை மையத்தின் சார்பில் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து உபான் சட்டமன்றத் தொகுதி
மக்கள் எல்லாக காலங்களிலும் அவதியுறும்போது,அவர்களுக்கு உதவுவதில்
ஆ.குமரேசன் பின்வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles