மாமன்னரிடம் தக்கியூடின் மன்னிப்பு கேட்க வேண்டும்

109

அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் முன்கூட்டியே நாடாளு மன்றத்தில் அறிவிப்பு செய்த சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி தெரிவித்தார்.
இருதய அடைப்பு சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அவர் தவறு செய்துவிட்டார் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி சுட்டிக்காட்டினார்.
அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் அனுமதியைப் பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் சட்டத்துறை அமைச்சர் தக்கியூடினுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான தாக்குதலை தொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here