34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

விஸ்மா பெர்வீராவில் தேசிய முன்னணி எம்பிக்களின் ரகசிய கூட்டமா?

🔥 Views : 6
👁 Reading Now : 39

தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான ஆகாயப் படை விஸ்மா பெர்வீராவில் தேசிய முன்னணி எம்பிக்களின் ரகசிய கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன தேசிய நாட்டுப்பற்று இயக்கம் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏன் இந்த கூட்டத்தை அம்னோவுக்கு சொந்தமான புத்ரா உலக வாணிப மையத்தில் நடத்தவில்லை.
அரசியல்வாதிகளின் ரகசிய கூட்டத்தை ஆகாயப் படை கட்டத்தில் நடத்துவதை கண்டிப்பதாக அது தெரிவித்துள்ளது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த சில எம்பிக்களுடன் சந்திப்பு கூட்டம் விஸ்மா பெர்வீராவில் நடந்தது உண்மையே என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான கோலாலம்பூர் விஸ்வா பெர்வீராவில் நேற்று முன்தினம் அந்த சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட எம்பிக்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை தற்காக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டனர் என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles